தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இதில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து வருகின்றார்
மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
சிலநாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் என்ற பெயரில் உள்ள பழைய பேருந்தில் ஒளிப்பதிவாளர் உடன் படப்பிடிப்பு செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். படக்குழுவினர் உடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படிக்கட்டுகளில் பயணம் செய்தபடி இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!