• Jan 18 2025

நானும் தனுசும் 6 வருசமா பேசிக்கிறதில்ல இதுதான் காரணம்! உண்மையை உடைத்த ஜிவி பிரகாஷ்

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் யுவன் சங்கர் ராஜா அனிருத்தை அடுத்து சிறந்த இசையமைப்பாளராக இருப்பவர் ஜிவி பிரகாஷ் ஆவார். ஆயிரத்தில் ஒருவன் , மதராசபட்டினம் போன்ற திரைப்படங்களுக்கு இவர் போட்ட இசை இன்றளவிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது எனலாம். இவ்வாறு இருந்த இவர் சமீபத்தில் நடிகராக மாறி பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையிலே யூடியூப் தளம் ஒன்றில் பேர்ட்டி கொடுத்த இவர் தனக்கும் நடிகர் தனுசுக்கும் இடையில் உள்ள பிரச்சனை பற்றி ஒப்பனாக பேசியுள்ளார்.


இந்தியா  மட்டுமின்றி உலக அளவில் பல திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்ப காலத்தில் தனுஷ் மற்றும் ஜிவி பிராக்ஸ் இணைந்து பொல்லாதவன் , ஆடுகளம் , மயக்கமென்ன போன்ற திரைப்படங்களில் இணைந்து செயற்ப்பட்டாலும் சில கருத்து வேறுபாடு காரணமாக பேசிக்கொள்வதில்லை என்ற தகவல் உண்மை என கூறியுள்ளார் ஜிவி பிரகாஷ்.


அவ்வாறு அவர் கூறுகையில் " நாங்கள் நல்ல நண்பர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக  ஆறு வருடங்கள் பேசாமல் இருந்தோம். ஆனால் இப்போது நல்ல கிலோசாக பழகுகிறோம். நண்பர்கள் என்றாலே சண்டைபோடுவதும் பிறகு பேசிக்கொள்வதும் சகஜமான ஒன்று தானே" என உருக்கமாக பேசியுள்ளார் இசையமைப்பாளர் GV பிரகாஷ்.  

Advertisement

Advertisement