• Jan 18 2025

வருங்கால மனைவியின் கண்ணை கட்டிய உமாபதி தம்பி ராமையா .. பிறந்த நாள் ஸ்பெஷல்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அவரை திருமணம் செய்ய போவது பிரபல குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி தம்பி ராமையா என்பது தெரிந்ததே.

இந்த நிலையில். தனது எதிர்கால மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் அவருடைய கண்ணை கட்டி சில ஆச்சரியங்களை அவருக்கு அளித்துள்ளார். அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

உமாபதி தம்பிராமையா மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகிய இருவருக்கும் இடையே சமீபத்தில் திருமணம் நிச்சயம் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற போகிறது. இதற்கான ஏற்பாடுகளை அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா அர்ஜுன் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாளில் தனது வருங்கால மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கண்ணை கட்டி அவருக்கு சில ஆச்சரியங்களை உமாபதி செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement