• Jan 19 2025

நடிகர் சங்க கட்டிடத்தை முடிக்க உதவி செய்யும் அரசு.. உதயநிதியின் சூப்பர் நடவடிக்கை..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படாமல் பல ஆண்டுகளாக இருக்கும் நிலையில் அந்த கட்டிடத்தை முடிக்க அரசே உதவி செய்யும் என உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் பொறுப்புக்கு வந்த பிறகு சென்னையில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் பிரம்மாண்டமான கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த கட்டிடம் பல்வேறு தடைகள் மற்றும் வழக்குகளை கடந்து கட்டப்பட்டு வந்த நிலையில் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் நிதிநெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக இந்த கட்டிடத்தின் கட்டுமான பணி நடைபெறாமல் இருக்கும் நிலையில் இந்த கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்வேன் என்று விஷால் சவால் விட்டிருந்தார். இந்த நிலையில் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி அரசு மூலம் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் அன்புள்ள உதயநிதி அவர்களே, எங்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தை கட்டி எழுப்பும் முயற்சிகளுக்கு உங்கள் பங்களிப்பிற்காக எங்களது நன்றிகள். முடிந்தவரை விரைவாக இந்த கட்டிடத்தை முடிக்க தமிழக அரசு முன் வந்ததற்கு  உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.

 நடிகர்,தயாரிப்பாளர், தற்போது விளையாட்டு துறை அமைச்சர் என்ற முறையில் நீங்கள் இதனை  அரசு உதவியுடன் முடித்து தருவீர்கள் என்று எண்ணுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement