• Jan 19 2025

தோழியின் வீட்டில் நடிகை பார்த்த வேலை.. சிறையில் கம்பி எண்ணும் பரிதாபம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நெருங்கிய தோழியின் அறையில் நடிகை செய்த வேலையால் தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் இன்ஸ்டா ரீல் மூலம் பிரபலமானவர் நடிகை சௌமியா. இவரது நெருங்கிய தோழியான மௌனியா என்பவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று கொண்டிருந்ததாகவும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது வீட்டின் அறையில் கூட அவர் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

குறிப்பாக மௌனியா இல்லாத நேரத்தில் கூட அவர் அறைக்குள் சென்று மணி கணக்கில் உள்ளே கதவை பூட்டி கொள்வார் என்றும் இதுகுறித்து மௌனிகாவின் பெற்றோருக்கும் இது குறித்து சந்தேகம் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென ஒரு கிலோ 750 கிராம் தங்கத்தை காணவில்லை என்பதை அறிந்து மெளனியாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் காவல்துறையில் புகார் செய்த நிலையில் மெளனியாவின் படுக்கை அறையில் தான் நகை லாக்கர் இருந்தது என்றும், இந்த அறைக்கு அடிக்கடி நடிகை சௌமியா வந்து செல்வார் என்றும் கூறினார்கள்.

இதையடுத்து போலீஸ் விசாரணை செய்தபோது சௌமியா தான் நகையை திருடினார் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் கோவாவில் தலைமறைவாக இருப்பதை அறிந்து தனிப்படை போலீசார் கோவா சென்று அவரை கைது செய்தனர். இருப்பினும் ஒரு கிலோ 750 கிராம் தங்கம் திருடப்பட்ட நிலையில் வெறும் 75 கிராம் மட்டுமே அவர் கையில் வைத்திருந்தார். மீதமுள்ள நகைகள் என்ன ஆச்சு என்பது குறித்து அவர் விசாரணையில் எதுவும் சொல்லவில்லை. தன்னை கட்டாயப்படுத்தி விசாரணை செய்தால்  விபரீத முடிவை எடுத்து கொள்வேன் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். பெரிய சினிமா நட்சத்திரமாக வரவேண்டும் என்று கனவு கண்டிருந்த சௌமியா தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் என்பது பரிதாபத்திற்குரியதாக உள்ளது.

Advertisement

Advertisement