மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய மார்கோ திரைப்படம் வசூலில் கொடி கட்டி பறந்தது. இவ் வெற்றியின் பின்னர் கெட்-செட் பேபி,மிண்டியும் பரஞ்சும் போன்ற மலையாள படங்களில் நடித்து வருகின்றார். தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது ரசிகர் ஒருவரிடம் நடந்து கொண்ட விதம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது இவர் பொது வெளியில் தன்னை தொடர்ந்து செல்பி எடுத்து வந்த ரசிகர் ஒருவரின் போனை புடுங்கி தனது சட்டை பாக்கெட் உள்ளே வைத்துள்ளார். இவர் ஆரம்பத்தில் பார்க்கும்போது எதோ ஒரு குழப்பத்தில் வந்து கொண்டிருந்தார். ரசிகர் இவ்வாறு செய்ததும் கோபம் அடைந்து போனை பறித்துள்ளார்.
இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. குறித்த நபர் நடிகருக்கு மிகவும் நெருக்கமாக போனை வைத்து வீடியோ எடுத்து வந்துள்ளதாக குறித்த காணொளியில் தெரியவந்துள்ளது.
Listen News!