• May 19 2024

விமான நிலையத்தில் தாய்,குழந்தைக்கு நடிகர் அஜித் செய்த நெகிழ்ச்சி சம்பவம் ..கணவர் போட்ட வைரல் பதிவு...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் துணிவு. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் பாக்ஸ் ஆஃபிசில் நல்ல வசூலை ஈட்டியதாகவும் சொல்லப்பட்டது.  நடிகர் அஜித் அடுத்ததாக லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். 

முன்னதாக இந்த திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திரைப்படம் நடக்கவில்லை. இந்த நிலையில்தான் அந்த வாய்ப்பானது இயக்குநர் மகிழ்திருமேனிக்குச் சென்றுள்ளது. 

இந்த படத்தின் கதையை ரெடி செய்யும் பணியில் இயக்குநர் மகிழ் திருமேனி மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அஜித் குழந்தையோடு தனியாக வந்த பெண்ணுக்கு உதவி செய்ததை குறிப்பிட்டு அவரது கணவர் பதிவிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பாரட்டை பெற்று வருகிறது.இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், என்னுடைய மனைவி இன்று கிலாஸ்கோவில் சென்னைக்கு எங்களுடைய 10 வயது குழந்தையுடன் தனியாக பயணம் செய்தார். அவளுக்கு லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 


அவருடன் அவர் போட்டோ எடுத்துக்கொண்டாள். ஆனால் அவர்  வெறுமனே போட்டோவுக்கு போஸ் மட்டும் கொடுக்க வில்லை அதையும் தாண்டி அவர் மிகவும் நல்ல மனிதராக இருந்தார். என்னுடைய மனைவி குழந்தையுடன் தனியாக பயணிப்பதை புரிந்து கொண்ட அஜித், குழந்தையின் பையை கையில் எடுத்துக்கொண்டார். 

அதை என்னுடைய மனைவி மறுக்க.. அதற்கு அஜித் இல்லை பராவாயில்லை.. எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அதனால் எனக்கு இது போன்ற சூழ்நிலை புரியும்.” என்று சொல்லியிருக்கிறார்.சூட்கேஸூடன் விமானம் வரை வந்த அவர், பையை அங்கிருந்த பணியாட்களிடம் கொடுத்து அது என்னுடைய மனைவியின் சீட்டிற்கு சென்று சேர்வதையும் உறுதி படுத்தியிருக்கிறார். 

இதனிடையே அங்கு பயணம் செய்த இன்னொரு நபர் ‘தலைவா நீங்க எதுக்கு,, நான் கொண்டு வர்றேன்’ என்று சொல்ல அதற்கு அஜித் பரவாயில்லை என்றார். விமான நிலையத்தில் உள்ளே செயல்படும் பேருந்தில் பயணம் செய்த போது என்னுடைய மனைவி இனியாவது நான் பார்த்துக்கொள்கிறேன் அஜித்திடம் என்று சொல்ல, அதற்கு அவர் மறுத்து விட்டார். அவருடைய அந்ததஸ்திற்கு இது போன்ற காரியங்களை செய்தது என்னை நெகிழ்ச்சி அடைய செய்து விட்டது. அவர் குணம் மிகவும் பணிவாக இருந்தது” என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement

Advertisement