கடந்த 2017 ஆம் ஆண்டு ஆதி, நிக்கி கல்யாணி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ், டேனியல், முனிஷ்காந்த் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘மரகத நாணயம் ’. இந்தப் படத்தை ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியிருந்தார்.
மரகத நாணயம் திரைப்படம் நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதில் பேய் கதைக்களத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சாகச பாணியில் திரைக்கதையை நகர்த்தி இருந்தார் இயக்குனர்.
மரகத நாணயத்தை தொட்டாலே இறந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அனைவரும் பின்வாங்க அதை ஹீரோ எப்படி கைப்பற்றினார்? அதை பாதுகாக்கும் இரும்பொறை அரசனிடமிருந்து எப்படி தப்பித்துக் கொள்ளுகின்றார்கள் என்று சுவாரசியமாக கதை நகர்ந்தது.
இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்பு இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை பற்றிய பேச்சுக்களும் அடிபட்டது. கடந்த ஆண்டு இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக இயக்குநர் அதிரடி தகவலை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், 'மரகத நாணயம்' படத்தில் கதாநாயகன் ஆதி வழங்கிய பேட்டியில், இந்த படத்தில் இரண்டாவது பாகம் பற்றிய படப் பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான அனைத்து வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாகம் முதலாவது பாகத்தை விட அதிரடியாக இருக்கும். இதனால் நாங்களும் மரகத நாணயம் படத்தின் இரண்டாவது பாகத்தை பார்க்க ஆவலாக இருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!