• Oct 09 2024

'சரிகமப' மேடையில் இலங்கை அரசியல்வாதி! நெகிழ்ச்சியான தருணம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் அட்டகாசமாக இடம்பெற்று வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது  பரபரப்பான கட்டடத்தை நெருங்கியுள்ளது.

இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுள் மலையகத்தை சேர்ந்த அசானியும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷாவும் பட்டையை கிளப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், சரிகமப நிகழ்ச்சிக்கு நேற்று வடிவேல் சுரேஷ் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார்.


இதன்போது, இலங்கைப் பிள்ளைகளின் திறமைகளையும் அவர் பாராட்டினார்.அத்துடன் கில்மிஷாவும்,அசானியும் இலங்கையர்களை பெருமைப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதன்போது மேலும் பேசிய அவர், இது சாதாரண விடயம் அல்ல, அசானியை அவரின் ஊரில் உள்ளவர்களுக்கே தெரியாது. மிகவும் பின் தங்கிய ஒரு பிரதேசம். இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்கள் என்றாலே வேறு ஒரு பார்வை அங்கு.இந்த வேதனைகளுக்கு மத்தியில் எல்லாம் சாதனை படைப்பது என்பது மிக பெரிய விடயம்.அசானிக்கு மட்டும் இல்லை அவரை பயிற்று வித்த ஜீ தமிழுக்கும் நன்றி.அவரின் தோழி கனிஷ்கா செய்யும் உதவிகளுக்கு நன்றி. கனிஷ்காவும் இலங்கையர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அசானி போட்டியில் தொடர வாய்ப்பு கொடுத்த அனைத்து தொப்புள் கொடிகளுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

இந்த தருணத்தில் சரிகமப நடுவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இலங்கை மக்கள சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நன்றி தெரிவித்தார்.


Advertisement