• Apr 27 2024

தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் சர்ப்ரைஸ்- கேப்டன் மில்லர் திரைப்படத்திலிருந்து கிடைத்த அப்டேட்

stella / 9 months ago

Advertisement

Listen News!


 இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் விறுவிறுப்பான பீரியாடிக் கதைகளத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்து வருகின்றார்.ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இரண்ட பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம்  1940களில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர் படக்குழுவினர்.


இந்த படத்தில் கதாநாயகியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார்.இவர்களுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 30 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டீசர் குறித்த அப்டேட் தான் வெளியாகியுள்ளது.


அதன்படி, 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement