• May 11 2024

உங்கள் வேலை எது?" அதை மட்டும் பாருங்க- தனலட்சுமியை வெறுப்பேற்றும் ஜிபி முத்து

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பித்து இன்றுடன் 10 நாட்கள் ஆகி விட்டன. இம்முறை டிவியில் மட்டுமல்லாது  டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகின்றது. இதனால் அங்கு நடக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றும் பார்வையாளர்கள் கவனத்தை அதிகம் பெற்று வருகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் எப்போதும் பரபரவென ஜிபி முத்து இயங்கிக் கொண்டே வருவதுடன் மட்டுமில்லாமல் தொடர்ந்து தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் கலகலப்பாக ஜிபி முத்து வைத்துக் கொள்கிறார். இந்த வாரத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.


இப்படி ஒரு சூழ்நிலையில், தனலட்சுமியிடம் ஜிபி முத்து பேசும் விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது.பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்தது பற்றி ஆயிஷா, தனலட்சுமி மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் சமையல் அறை அருகே நின்ற படி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனைக் கவனித்ததும் அங்கே வரும் ஜிபி முத்து, தனலட்சுமியிடம், "உங்கள் வேலை எது?" என கேட்கிறார். 

கிச்சன் டீம் என அவர் பதில் சொல்ல, "அந்த வேலையை மட்டும் பாருங்கள். தேவை இல்லாம எதுக்கு பேசுகிறீர்கள்?. இரவு உட்காரும் போது பேசி சண்டை போடுங்கள். இப்போது வேலையை பாருங்கள். அது தான் அவசரம்" என கூறுகிறார்.வேலை தான் முக்கியம் என்பதை போட்டியாளர்களுக்கும் உணர்த்தி பம்பரம் போல சுழன்று எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜிபி முத்து குறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement