• Jan 19 2025

ஹீரோக்களுக்கு வாயில் என்ன கொழுக்கட்டையா? உங்களுக்கு எல்லாம் எதுக்கு மீசை? த்ரிஷா விவகாரத்தில் ப்ளூ சட்டை கேள்வி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை திரிஷா குறித்து கேவலமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. தற்போது அதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விடையம் குறித்து பல நடிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

லியோ படத்தில் திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை மாதிரி கட்டிலில் தூக்கி போடலாம் என நினைத்தேன் என்று மிகவும் கீழ்த்தனமாக அவர் பேசினார்.இதனால் கடும் கோபத்திற்கு ஆளான நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். இதன்பின் லோகேஷ் கனகராஜும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், மன்சூர் அலிகான் விவகாரம் தொடர்பில் ப்ளூ சட்டை மாறனும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.அதன்படி அவர் கூறுகையில்,

த்ரிஷா குறித்து மன்சூர் பேசியதற்கு நடிககைகள் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளனர்‌. இயக்குனர்களில் கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் போன்றோர் மட்டுமே பேசியுள்ளனர்.முன்னணி நடிகர்கள் மற்றும் சீனியர் இயக்குனர்கள் அனைவரும் வாயில் கொழுக்கட்டையை வைத்துள்ளனர். இவர்களுடன் பல படங்களில் த்ரிஷா நடித்துள்ளார். ஆனால் ஒருவரும் வாய் திறக்கவில்லை. படத்தில் மட்டுமே பெண்களுக்காக புரட்சி வசனம் பேசுவார்கள் இந்த ஹீரோக்கள். சீனியர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இன்னும் சுத்தம். உங்களுக்கு எல்லாம் எதுக்கு மீசை? என திட்டித் தீர்த்துள்ளார்.

Advertisement

Advertisement