• Jan 18 2025

நான் என்ன உனக்கு அடிமையா? மேடையில் கொதித்தெழுந்த பெண்! இந்த வாரம் பெரும் பஞ்சாயத்தில் 'நீயா நானா'

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின், எதிர்வரும் 19ஆம் திகதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம் வாங்க...

அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களும் சங்க நிர்வாகிகளும் இரண்டு அணியாக கலந்து கொண்ட நிலையில், அதில் ஒரு பெண் கேட்ட கேள்வியை கேட்டு கோபிநாத் அதிர்ச்சியாகிவிட்டார்.

அந்த வகையில் இந்த வாரம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களும் சங்க நிர்வாகிகளும் இரண்டு அணியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்களுக்கு இந்த சங்க நிர்வாகிகளால் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். 

அப்போது பல குடியிருப்பு வாசிகள் சங்க நிர்வாகிகள் அனுமதி இல்லாமல் மீன், சிக்கன் கூட யாரும் உள்ளே கொண்டு வர முடியாது. அதே நேரத்தில் சங்க நிர்வாகிகளுக்கு கமிஷன் கொடுத்தவர்களால் மட்டும் உள்ளே கொண்டு வர முடிகிறது. அவர்கள் சொன்ன விலைக்கு தான் நாங்கள் பொருட்களை வாங்க வேண்டிய நிலைமையில் இருக்கிறோம் என்று தங்களுடைய கஷ்டத்தை சொல்லி இருக்கிறார்கள். 


இப்படியாக பலர் தங்கள் கருத்துக்களை பேசிக் கொண்டிருக்க, அதில் சங்க நிர்வாகிகளில் ஒரு பெண் நான் என்ன உனக்கு வேலை செய்றனா? நான் என்ன உனக்கு அடிமையா? யாருமே எங்க கிட்ட எதையும் ரிக்வெஸ்டா கேக்க மாட்டாங்க என்று கஷ்டத்தை சொல்கிறார்.

அதற்கு கோபிநாத் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் நீங்க ஏன் இவ்வளவு கோபமா நடக்குறீங்க. நீங்க எந்த வேலையும் செய்யறது கிடையாதுஇ செய்ற இடத்தில் இருக்கவர்களிடம் ஏன் ஒரு வேலை ஏவுகிற மாதிரி தோற்றத்தில் பேசுறீங்க என்று கேட்கிறார். 


அதற்கு குடியிருப்பு வாசிகளில் ஒரு பெண் நாங்க சரின்னு சொல்லலையே தப்புதான் என்று சொல்கிறார். அதற்கு அதை தொடர்ந்து இன்னொரு குடியிருப்பு வாசியான பெண் ஒருவர் நாங்கள் ஒரு வேலையை செய்ய சொன்னால் அதை அவர்கள் பர்சனலா எடுத்துக்கிறாங்க என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து இன்னொரு குடியிருப்பு வாசி பெண், இமெயில் போட்டாச்சு எதுக்குமே ரிப்ளை வரலன போது, இதே டோன்ல தான் நான் ரிப்ளை போட்டேன் என்று கறாராக பேசுகிறார். 

இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இந்த வாரம் பெரும் பஞ்சாயத்து நீயா நானா நிகழ்ச்சியில் இருக்கப் போகிறது.


 

Advertisement

Advertisement