• Apr 27 2024

பஞ்சதந்திர கான்பெரன்ஸ் கால் காட்சியில் ரி கிரியேட் செய்யப்பட்ட விக்ரம் ப்ரோமோ-ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ,பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.

5 மொழிகளில் வௌியாகும் இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. அதையடுத்து கமலின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான பஞ்சதந்திரம் படத்தில் கமலோடு நடித்த ஸ்ரீமன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த் மற்றும் யூகி சேது ஆகியோர் படத்தின் பிரபல காட்சியான கான்பெரன்ஸ் கால் பேசும் காட்சியை ரி கிரியேட் செய்து தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த ப்ரமோஷன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement