• Apr 27 2024

பிக்பாஸ் பிரபலத்தின் மகளுடன் விஜய் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகிலே மிகவும் பெரிதாக எதிர்ப்பார்த்த விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியானது. 


முதல் நாளில் மட்டுமே இப்படம் தமிழகத்தில் ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்தது என தகவல் வெளியாகி இருந்தது.


அத்தோடு நேற்றும் படத்திற்கான வசூலுக்கு எந்த குறையும் இல்லாமல் இருந்தது. மேலும் இதில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம் என ஏகப்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளார்கள், பிக்பாஸ் மூலம் மக்களிடம் பெயர் பெற்ற கணேஷ் வெங்கட்ராமனும் இதில் நடித்திருக்கிறார்.


குடும்பத்துடன் விஜய்யின் வாரிசு படத்தை பார்த்துள்ள கணேஷ் வெங்கட்ராமனுக்கு விஜய்யை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. மேலும் அந்த சந்திப்பில் விஜய் கணேஷ் வெங்கட்ராமனின் மகளை தூக்கி வைத்துக் கொள்ள அப்போது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


எனினும் அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்த கணேஷ், விஜய்க்கு தனது நன்றியை கூறியுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement