விஜய் தொலைக்காட்சி என்றாலே சில முகங்கம் நமக்கு நியாபகம் வரும். அதில் ஒருவர் தான் ராமர், இவர் காமெடிக்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் சிலர் உள்ளார்கள் என்று தான் கூறவேண்டும்.
மேலும் எந்த புது நிகழ்ச்சி ஆரம்பமானாலும் அதில் அவர் வந்துவிடுகிறார், அவர் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்ற அளவிற்கு உள்ளது.
அது இது எது நிகழ்ச்சியில் இடம்பெறும் சிரிச்சா போச்சு மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராமர்.
இவர் இப்போது படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார், அடுத்தடுத்து நிறைய படங்களும் நடிக்க இருக்கிறார்.
எனினும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் நகைச்சுவை செய்து வருவதோடு தனுஷின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் ராமர் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
Listen News!