நெதர்லாந் நாட்டின் ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்தியாவில் முதலில் ஹிந்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.எனினும் அதனை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது.
இவ்வாறு இருக்கையில் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல் 3 வாரமும், மீதம் சிம்பு அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த சீசன் துவங்க இருப்பதாக தகவல் தற்போது கசிந்த வண்ணம் உள்ளது. . OTT தள 24 மணி நேர ஷோவில் 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பங்கேற்றனர்.
அத்தோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அரசியல், ஷூட்டிங் என பிசியாக இருப்பதால் விலகுவதாக கமல் கூறி விட்டு விலகவே, சிம்பு மீதமிருந்த வாரங்கள் தொகுத்து வழங்கினார்
இவ்வாறுஇருக்கையில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை சிம்பு அல்ல கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது. பிக் பாஸ் மேடையில் கமலை பார்க்கத் தான் பார்வையாளர்கள் ஆவலாக இருக்கிறார்கள். அதனால் இந்த தகவல் அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
பிக் பாஸ் 6 வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்களில் 5 பேர் உறுதி செய்யப்பட்டுவிட்டார்களாம். இதற்கிடையே லெஜண்ட் சரவணனை பிக் பாஸ் 6 வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தோடு லெஜண்ட் மட்டும் அந்த வீட்டிற்கு சென்றால் வேற லெவலில் இருக்கும் என்கிறார்கள். ஆனால் லெஜண்ட் செல்ல வாய்ப்பே இல்ல ராஜா.
இந்நிலையில் விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்துதன் சம்பளத்தை உயர்த்திவிட்டார் கமல் ஹாசன். ரூ. 130 கோடிக்கு மேல் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலுக்கு எத்தனை கோடி சம்பளம் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆவலாக இருக்கிறார்கள்.
பிற செய்திகள்
- “நான் படிக்காதவன் என்பதாலே…” சர்ச்சைக்கு விளக்கம் சொன்ன சூரி!
- பூஜா ஹெக்டே போல் மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்…வைரலாகும் புகைப்படங்கள்..!
- நாக சைதன்யா இத்தனை சொகுசு கார் வைத்துள்ளாரா..? வெளியான விபரத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- குட்டைசோட்சில் கவர்ச்சி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே-குஷியில் லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!
- போஸ்டரில் என் போட்டோ கூட போடல: தமன்னா விடுத்த அதிர்ச்சி புகார்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!