அஜித் நடிப்பில் ஆதிக் ரவி இயக்கத்தில் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியாகவுள்ள "விடாமுயற்சி" திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் தொடர்பாக எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்த படத்தில் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். மேலும் பிரபு, பிரசன்னா, ஜோகிபாபு, பிரியா பிரகாஷ் வாரியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜித் இந்த படத்தில் 3 கதாபாத்திரங்களில் நடித்ததாகவும் அவரது மனைவி ஷாலினி இதில் ஒரு ஹெமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இப் பாடலினை ஜி.வி உடன் இணைந்து இயக்குநர் ஆதிக் ரவியும் பாடி வைப் செய்துள்ளார். மேலும் இப் ப்ரோமோ காணொளி வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில் அதிகபட்ஷ பார்வையாளர்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப் பாடலின் முழு வீடியோ நாளை மாலை ஜந்து மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது .
Listen News!