தற்போது தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அந்த வகையில் இப்பொது அவர்களின் சம்பளமும் உயர்ந்து காணப்படுகின்றது. ஹீரோக்களை போன்று ஒவ்வொரு படத்தின் வெற்றியின் பின்னரும் ஹீரோயின்களதும் சம்பளம் அதிகரித்து செல்கின்ற மரபு தொடங்கியுள்ளது. இந்த வரிசையில் தற்போது முன்னனி நடிகைகளின் சம்பள விபரங்கள் வெளியாகியுள்ளது.
ஹொலிவூட் நடிகைகளில் அதிக சம்பளம் வேண்டும் நடிகைகளாக திரிஷா மற்றும் நயன்தாரா இருந்து வந்தனர். தற்போது இவர்களது இடத்தினை ஒரு சில ஹீரோயின்கள் பிடித்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது சாய்பல்லவி அமரன் படத்தின் பின்னர் 18-20 கோடி சம்பளம் பெற்று முன்னனியில் இருக்கின்றார்.
அடுத்தபடியாக நயன்தாரா தற்போது சுந்தர்சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் நடிப்பதற்காக 15 கோடி சம்பளம் வேண்டியுள்ளார். அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 வெற்றியை தொடர்ந்து ஒரு படத்தில் நடிக்க 13 கோடி சம்பளம் வாங்குகின்றார். மேலும் அடுத்து திரிஷா 12 கோடி சம்பளம் வாங்குகின்றார். அடுத்து சமந்தா ஒரு படத்தில் நடிப்பதற்காக 10 கோடி சம்பளம் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Listen News!