தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான் சோபிதா துலிபாலா.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகின்றார்.
அண்மையில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இக்கதாப்பாத்திரம் ரசிகர்களடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.
இவர் தற்பொழுது பாலிவுட்டில் வெப் தொடர்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார்.இதுதவிர கொஞ்சம் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார்.அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை சோபிதா பேசும்போது, படங்களில் நடிக்க வருவதற்கு முன் நான் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு தேடினேன்.
அப்போது நான் வெள்ளையாக இல்லை, அழகாக இல்லை என்று எனக்கு முன்பே கூறினார்கள், அதற்காக நான் சோர்வடையவில்லை.எனது முழு திறமையை சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் காட்டி வந்தேன், அந்த சிறிய கதாபாத்திரங்கள் தான் நிறைய கற்றுக் கொடுத்தன என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!