• Mar 26 2023

அப்போ.. நம்ம த்ரிஷா இல்லையா ..? தளபதி 67 அப்டேட்டால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  அடுத்ததாக தனது 67-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். 

படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

நேற்று தளபதி 67 படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் வரிசையாக இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அறிவிப்பை 1 மணி நேரத்திற்கு ஒரு முறை அறிவித்து வந்தது . அறிவிப்பில் வந்த அனைத்து  நடிகர்கள் நடிகையும் நன்றாக நடிக்க கூடியவர்கள் தான். எனவே படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது.



இவ்வாறாக நேற்று வெளியான அறிவிப்பில் படத்தில் மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குநர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

 ஆனால், இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த த்ரிஷா நடிப்பதாக அறிவிக்கப்படவில்லை. இதனால் த்ரிஷா ரசிகர்கள் அதிர்ச்சியுடன் எங்கங்க திரிஷா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் த்ரிஷா நடிப்பதை இன்று படக்குழு அறிவிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



 “தளபதி 67” டைட்டில் வடிவமைக்கப்பட்டிருந்தது. எனவே இந்த திரைப்படமும் லோகேஷ் கனகராஜின் LCU-வில் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லபப்டுகிறது.


Advertisement

Advertisement

Advertisement