• Apr 25 2024

அமேசான் பிரைம் வீடியோ தயாரிக்கும் இந்திய வெப் தொடர் ! வேற லெவலில் மாஸ் காட்டும் சமந்தா

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா அமேசான் பிரைம் வீடியோ தயாரித்த “தி ஃபேமிலி மேன்” என்ற வெப் தொடரின் மூலம் டிஜிட்டல் தளங்களில் அறிமுகமானார். இந்த இந்தி வெப் தொடரில் தனது தைரியமான நடிப்பிற்காக பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, ‘தி ஃபேமிலி மேன்’ இயக்குநர்களாக ராஜ் மற்றும் டிகேவுடன் சமந்தா மீண்டும் இணைகிறார் என்று பேசப்பட்டது.

இந்நிலையில், இன்று அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ருஸ்ஸோ பிரதர்ஸின் தயாரிப்பில் “சிட்டாடல்” இந்திய வெப் தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே ஆகியோர் இந்தியன் ‘சிட்டாடல்’ தொடரை  இயக்குகிறார்கள்.என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, சிட்டாடல் வெப் தொடர் ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டு அமேசான் பிரைம் பிரைம் வீடியோவில்  வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. 

இதனை ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கி இருந்த நிலையில், இந்திய வெப் தொடரை தயாரிக்க முன் வந்துள்ளனர்.இது குறித்து அமேசான் பிரைம் அறிவிப்பில், “மீண்டும் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் படப்பிடிப்புக்காக செர்பியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்வதற்கு முன், முதல் கட்ட படப்பிடிப்பு இந்தியாவில் நடைபெற்று வருகிறது. எங்களிடம் ஒரு அற்புதமான பக்குழுவினர் மற்றும் மிகவும் திறமையான நடிகர்கள் உள்ளனர் என்று பெருமையாக தெரிவித்துள்ளது.



Advertisement

Advertisement

Advertisement