• Sep 21 2024

தனது ரசிகனின் மனைவி ஆசையை நிறைவேற்றிய சூப்பர் ஸ்டார்! ஏர்போர்ட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் சூப்பர் ஸ்டாராகவும் பல வருடங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இன்று தமிழ் சினிமா இவ்வளவு பிரபலமாகவும் பெரிய மார்க்கெட் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். 

இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

இந்த நிலையில்,  சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான 'தலைவர் 170' மும்பையில் நடத்தப்பட்டுள்ளது. குறித்த படத்தின் படப்பிடிப்பில்  அமிதாப்பச்சனும் கலந்து கொண்டு நடித்தார். இதை தொடர்ந்து மும்பையில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து  ரஜினிகாந்த் இன்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

அதன்படி, சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்தை பார்த்த ரசிகர் ஒருவர் தனது மனைவி, 'தன்னுடைய பிறந்தநாளில் உங்களை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்' என தனது மனைவியின் ஆசையை  கூற, ரஜினிகாந்த் மிகவும் சாதாரணமாக அவர்களை அழைத்துவருமாறு  சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். குறித்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

Advertisement

Advertisement