தமிழ் தொலைக்காட்சியில் நீண்ட நாட்களாக ரசிகர்களுக்கு ஒரு வலிமையான உணர்வுத் தொடர்பை ஏற்படுத்திய நபராக “நீயா நானா” நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் விளங்குகின்றார். இவர் நிகழ்ச்சியின் சிறந்த தொகுப்பாளராக மட்டுமல்லாமல், சமுதாய விழிப்புணர்வின் வெளிப்பாடாகவும், பலரை ஊக்குவித்த குரலாகவும் திகழ்ந்தவர்.
இந்நிலையில், தற்போது சமூக ஊடகங்களில் வெளிவந்து பரவி வரும் ஒரு தகவல்கள் கோபிநாத் அவர்களின் தொழில்முறை, மனிதநேயம் மற்றும் கடமை உணர்வு என்பவற்றை வெளிக்கொண்டு வரும் வகையில் அமைந்திருந்தது.
கடந்த 2022ம் ஆண்டு, கோபிநாத் அவர்களின் அன்புத் தந்தை உயிரிழந்தார். குடும்பத்தில் ஒரு பெரிய இழப்பு. ஒருவருக்கு மனம் உதிர்ந்து போவதற்கு சமமான சூழ்நிலை. அதுபோன்ற மிகுந்த வேதனையான நேரத்திலும் கோபிநாத் “நீயா நானா” நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது.
தந்தையின் இறப்பிற்குப் பின்னர், நான்கு நாளில் கோபிநாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது சாதாரணமான செயல் அல்ல. இத்தகைய நிகழ்வு தொலைக்காட்சி பணி மீது அவர் கொண்டுள்ள மரியாதையையும், தன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் மீது வைத்துள்ள அன்பையும் பிரதிபலிக்கின்றது.
விஜய் டீவியின் தலைசிறந்த ஷோவாக காணப்பட்ட “நீயா நானா” கடந்த பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகின்றது. பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் என சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் மேடை வழங்கும் இந்நிகழ்ச்சியின் வேந்தராக கோபிநாத் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!