தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரும், தனித்துவமான பேச்சாற்றல் கொண்டவருமான எம்.ஆர். ராதா, அவர்களின் வாரிசாக இன்று திரைத்துறையில் நடித்து வருபவர் தான் வாசு விக்ரம். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தனது குடும்ப வாழ்க்கை மற்றும் தாத்தா எம்.ஆர். ராதாவைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
வாசு விக்ரம் பேசிய பேட்டியின் முக்கிய அம்சங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. குறிப்பாக அவரது குடும்ப வாழ்க்கையைப் பற்றிய விபரங்கள் நகைச்சுவை கலந்திருந்தாலும், அதிலிருந்து எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை மற்றும் குடும்ப மதிப்பீடுகள் பற்றிய ஆழமான உணர்வுகள் வெளிப்படுகின்றன.
அதன்போது, “இப்போது பலரும் ரெண்டு மனைவியோட வாழ்க்கை கஷ்டம் என சொல்லுறாங்க... ஆனால் எம்.ஆர். ராதா அவருக்கு 8 மனைவிகள்! , அத்தனை பேரையும் ஒரே வீட்டில வச்சு, 20 பிள்ளைகளை பாசமா வளர்த்து, ஒரு ராஜாங்கத்துக்கு இணையான குடும்ப வாழ்க்கையை எம்.ஆர். ராதா அவர்கள் நடத்தியிருந்தார்.” என்றார் வாசு விக்ரம்.
அவர் மேலும், “எங்க வீடு உண்மையிலேயே கல்யாண வீடு மாதிரி இருக்கும். தினமும் 100 பேருக்கு சமைப்பாங்க. காலையில இருந்து இரவு வரை எந்தநேரமும் சமைப்பாங்க." எனவும் தெரிவித்திருந்தார். அவரது வார்த்தைகள், வாழ்க்கை நுணுக்கங்களை நகைச்சுவை கலந்து தெரிவிக்கும் வித்தை கொண்டவையாக அமைந்துள்ளன.
Listen News!