தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்றைய தினம் அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக ஆரம்பமாக உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் தொகுப்பாளராக அறிமுகமாகி தனது இயல்பான பேச்சால் ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி, இந்த சீசனையும் தொகுத்து வழங்குகின்றார். இதற்கான ப்ரோமோ ஏற்கனவே வெளியாகிய ரசிகர்கள் இடையே வைரலானது.
ஒன்னுமே புரியல, பாக்க பாக்க தான் புரியும், போகப் போகத்தான் தெரியும் என்ற வசனங்களுடன் இந்த சீசன் ஆரம்பமாக உள்ளது. இந்த சீசனின் லோகோவும் பலரைக் கவரும் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீசனின் டாஸ்க்குகள் பல திருப்பங்களும் கணிக்க முடியாததாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிகளை போல் இல்லாமல் இந்த முறை போட்டியாளர்களின் பெயர் பட்டியல் ரகசியமாகவே வைத்து பேணப்படுகின்றது. இருப்பினும் சமூக ஊடகங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய தகவல்கள் வெளியானவாறு உள்ளன.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் வாட்டர் மேலன் திவாகர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. எனினும் இன்று மாலை அதிகார்வபூர்வமாக இதில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!