• May 19 2024

செம மாஸாக டென்னிஸ் விளையாடும் சூர்யா- இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான வீடியோ-ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்

stella / 7 months ago

Advertisement

Listen News!


எந்தவொரு திரையுலக முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும் குறுகிய காலக்கட்டங்களிலேயே வளர்த்து கொண்டு, இன்றைய முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர், நடிகர் சூர்யா

சமீபகாலமாக இவர் தெரிவு செய்து நடித்து வரும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.


 இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை தீஷா பதானி நடிக்கிறார்.இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படம் ஸ்டுடியோ க்ரீன் சார்பாக தயாராகி வருகிறது. கங்குவா படத்திற்கு பின் மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு முதற்கட்ட பணிகளும் நடந்து வருகிறதாம். இதற்குப்பின் தான் வாடிவாசல் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் என கூறப்படுகிறது.மேலும் பொதுவாக நடிகர் மற்றும் நடிகைகளின் அன்லீஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதுண்டு.

அந்த வகையில் நடிகர் சூர்யா டென்னிஸ் விளையாட்டு விளையாடும் அன்ஸீன் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement