• Feb 22 2025

வெறித்தனமா வெளியான SK23 பட டைட்டில் கிளிம்ஸ்.! ஏ. ஆர் முருகதாஸின் அதிரடி ஆக்சன்

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23 வது படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைப்பதோடு இதனை ஸ்ரீ லட்சுமி மூவி தயாரிக்கின்றது. 

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக தற்போது சிவகார்த்திகேயன் வலம் வருகின்றார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும், பாடகர் ஆகவும், பாடல் ஆசிரியர் ஆகவும் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான அமரன் திரைப்படம் இவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு சுமார் 350 கோடிகளுக்கு மேல் வசூலில் சாதனையும் படைத்திருந்தது. ரஜினிகாந்த், விஜய், கமலஹாசனுக்கு பிறகு அதிக வசூலை குவித்த நாயகனாக தற்போது சிவகார்த்திகேயன் காணப்படுகின்றார்.


சிவகார்த்திகேயன் தற்போது மூன்று படங்களை பிஸியாக நடித்து வருகின்றார். அதன்படி அவருடைய 23 வது படத்தை முருகதாஸ் இயக்க, 24வது படம் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்திலும் தயாராகி வருகின்றது. அத்துடன் சிவகார்த்திகேயனின் 25 வது படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகின்றார்.

இந்த நிலையில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் சிவகார்த்திகேயனின் 25 வது படத்திற்கான டைட்டில் சற்று முன் வெளியாகி உள்ளது. இதனை ஏ.ஆர் முருகதாஸ் தனது இன்ட்ரா பக்கத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

அதன்படி சிவகார்த்திகேயனின் 23வது படத்திற்கு "மதராஸி'' என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் ஐந்து மொழிகளில் இந்த படத்திற்கான போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement