தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் சூர்யா, சினிமா துறையில் மட்டுமில்லாமல் பிசினஸ், சமூகப் பணி என பிறப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். இவருடைய மனைவியான ஜோதிகாவும் சமூகத்துக்கு தேவையான சேவைகளை தேர்ந்தெடுத்து செய்து வருகின்றார்.
இந்த நிலையில், அகரம் நிறுவனத்திற்கான புதிய அலுவலகம் நேற்று சென்னையில் திறக்கப்பட்ட போது அதில் சூர்யா எமோஷனலாக பேசிய பல விஷயங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. சூர்யாவின் இந்த செயலுக்கும் முயற்சிக்கும் பலர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு ஆதரவையும் வழங்கி வருகின்றார்கள்.
அதன்படி சூர்யா பேசுகையில், கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு பிறகு இந்த இடம் கிடைச்சி இருக்குது. இது படிப்புக்காக கொடுக்கப்படுகின்ற நன்கொடையில் உருவான இடம் கிடையாது. நீங்க எனக்கு கொடுக்கிற வாய்ப்பு, எனது வருமானத்தின் மூலமாக கட்டப்பட்ட பில்டிங் தான் இது.
நன்கொடையாக நீங்க கொடுக்கின்ற ஒவ்வொரு காசையும் படிப்பு செலவுக்காக மட்டும் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இதை நான் ஏன் மீண்டும் சொல்லுகின்றேன் என்றால் பத்தாயிரத்துக்கு மேல அப்ளிகேஷன் இன்னும் அரசு பள்ளிகளில் இருந்து வந்து கொண்டுள்ளன. அவர்களுக்கான தேவைகளும் அதிகரித்துள்ளன.
ஆனா வருஷத்துக்கு 700 மாணவர்களுடைய வாழ்க்கையை தான் மாற்ற முடியுது. இதனால இன்னும் நிறைய பேரோட அன்பு தேவைப்படுது . அவர்களுடைய ஆசிர்வாதமும் தேவைப்படுகின்றது. மேலும் பணம் மட்டுமில்லாமல் உங்களுடைய நேரமும் தேவைப்படுகின்றது.
அகரம் 20 வருஷமாக நடந்து கொண்டு இருக்குது என்றால் அதற்கு முக்கிய காரணம் தன்னார்வலர்கள் தான். உதாரணமாக சொல்ல போனால் கல்வராயன் மலை என்ற இடத்தில் இருந்து ஒரு அப்ளிகேஷன் வந்தது.
ஆனால் மீண்டும் அங்கு பயணிக்க பஸ், கார், சைக்கிள் என எதுவுமே செல்ல முடியாது. இதனால் 9 தன்னார்வலர்கள் அங்கு சென்று மீண்டும் தங்களால் முடியவில்லை என்று வந்து விட்டார்கள்.
இறுதியாக சென்ற ஒரு தன்னார்வலர் தான் குறித்த மாணவனிடம் அப்ளிகேஷனை கொடுத்தார். தற்போது அவர் டாக்டராக காணப்படுகின்றார். ஆகவே உங்களுடைய ஆதரவு தொடர்ந்தும் வேண்டும் என சூர்யா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Listen News!