• Jan 18 2025

சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குவா.. குவா.. சத்தம்? குட்டி எஸ்கே கம்மிங் சூன்...

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் தான் சிவகார்த்திகேயன். அவர் நடித்த டான், டாக்டர் ஆகிய இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாய் வரை  வசூலித்தது. 2K கிட்ஸ் அவரை தூக்கி கொண்டாடி வருகின்றார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் தான் அயலான். இந்த படம் குட்டிஸ் முதல் பெரியார்கள் வரை அனைவரையும் கவர்ந்திருந்தது. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் ஓரளவு வரவேற்பு பெற்றது அயலான்.

இதை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க, இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்திருக்கின்றார்.


அமரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கும் கமிட்டானார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் என்பதற்கான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

அதாவது சிவகார்த்திகேயனும் அவரது மனைவி ஆர்த்தியும் நெருங்கிய உறவினரின் விழா ஒன்றுக்கு சென்றிருந்தபோது ஆர்த்தியின் வயிறு கொஞ்சம் பெரிதாக இருந்துள்ளது. இதை பார்த்துவிட்டு ஆர்த்தி கர்ப்பமாக இருக்கின்றாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதோடு தற்போது அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement