• Jan 19 2025

தனது பெற்றோரின் வாழ்க்கையை படமாக எடுக்கணும்.. ப்ரொடியூசராக களமிறங்கும் சூரி..!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக என்ட்ரி ஆனவர் நடிகர் சூரி. அந்தப் படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி இன்றளவும் பேசப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய், அஜித் என முன்னணி பிரபலங்களுடன் இணைந்து காமெடியில் கலக்கியிருந்தார். அதன் பிறகு படிப்படியாக முன்னேறி தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு சூரியை ரசிகர்கள் பார்த்து வியந்திருந்தார்கள். அவரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. அதை தொடர்ந்து கொட்டுக்காளி படத்தில் ஹீரோவாக நடித்தார். மேலும் கருடன் படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார்.


இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் சூரி கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், தன்னுடைய அம்மா அப்பாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை எடுக்க வேண்டும். அதுதான் எனது விருப்பம் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் பேசுகையில்,

என்னுடைய அப்பா, அம்மாவுக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். அவர்களின் வாழ்க்கையை ஒரு படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். இதை நான் பல இயக்குனர்களிடம் கூறினேன். யார் படமாக எடுக்க தயாராக இருந்தாலும் ஓகேதான். வெற்றிமாறனிடம்  கூட மூன்று மணி நேரம் உட்கார்ந்து சொன்னேன். இதுவரையில் அவர் இப்படி உட்கார்ந்து கதையை கேட்டு இருப்பாரா என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement