• Sep 13 2024

இன்று மாலை செம்ம விருந்து காத்திருக்கு.. சிவகார்த்திகேயன் பட அப்டேட் சொன்ன ராஜ்கமல் பிலிம்ஸ்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

 நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’எஸ் கே 21’. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த நிலையில் அதன் பிறகு சென்னை உள்பட பல பகுதிகளில் நடந்தது என்பதும், இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால்  அன்றைய தினம் இந்த படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் டீசரே வெளியாக இருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த வீடியோவையும் தனது சமூக வலைத்தளத்தில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



மேலும் இந்த படம் முழுக்க முழுக்க சீரியசான படம் என்றும் மற்ற சிவகார்த்திகேயன் படங்களில் இருக்கும் காமெடி இதில் ஒரு சதவீதம் கிடக்க கிடையாது என்றும் விஜய் நடித்த ’துப்பாக்கி’ படம் போன்று ஒரு ராணுவ வீரரின் கதையை மிகவும் சீரியசாக சொல்லி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.  

இன்று மாலை ஐந்து மணிக்கு ’எஸ்கே21’ படத்தின் டீசர் வெளியாக உள்ளதை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் அந்த வீடியோவுக்கு எதிர் பார்த்து காத்திருக்கின்றார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார் என்பதும் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகவும் பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.


Advertisement

Advertisement