• Jan 18 2025

அர்ச்சனாவின் வருகைக்கு பின்னாடி இப்படியொரு மாஸ்டர் பிளானா? மைண்ட் வாய்ஸ்ல உளறித்தள்ளிய கேப்டன்! உஷாராகும் ஹவுஸ்மேட்ஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தற்போது மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. இதுவரையில் பிக் பாஸ் வீட்டில் தான் சொல்வது தான் சட்டம் செய்வது தான் சரியென காணப்பட்ட மாயா, அர்ச்சனாவின் வருகைக்கு பின்னர் அப்படியே அடங்கி விட்டார் எனலாம்.

அதாவது அர்ச்சனா வருவதற்கு முன் புள்ள பூச்சியாக சண்டை சச்சரவுக்கு ஒதுங்கியே இருந்தார் விசித்ரா. ஆனால் அர்ச்சனா வந்ததற்கு பின் கூட்டு சேர்ந்து ஒவ்வொரு பேரையும் அலற வைக்கிறார். அதன்படி, தற்போது மாயா, பூர்ணிமாவை திணறடிக்க வைத்துள்ளார்.

அத்துடன், மக்கள் மத்தியில் தற்போது தினேஷ் பெரிதளவில் இடம் பிடித்துள்ளார். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு பல விஷயங்களை ஓபன் ஆக உளறி இருக்கிறார்.


அதாவது, அர்ச்சனா பிக் பாஸ் தொடங்கிய முதல் நாளே வரவேண்டியதாம். ஆனால் அப்படி அவரை விடாமல் வைல்ட் கார்டு மூலம் அனுப்பியது பிக் பாஸ் இன் குருநாதர் தான் என்று கூறியிருக்கிறார். அதற்கு பக்கத்தில் இருந்த மணிச்சந்திராவும் ஆமா எனக்கும் அர்ச்சனாக்கும் தான் சூட்டிங் ஒன்றுபோல நடந்தது. அப்படி இருக்கும் பொழுது அர்ச்சனாவை எங்களுடன் அனுப்பாமல் வைத்துதான் ஏனென்றால் அப்பொழுது புரியாமல் இருந்தது.

ஆனால் இப்பொழுது இவருக்கு பின் பல சூழ்ச்சிகள் நடந்திருக்கிறது என்பது புரிகிறது என்று மணி கூறுகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து இவர் வருவது வரை 24 மணி நேரமும் என்ன நடக்கிறது என்று ஒன்று விடாமல் பார்த்து பக்கவாக பிளான் பண்ணி வந்திருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்தியதால் அர்ச்சனா ஒரு நல்ல பிளேயராக மக்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டார் என்று பிக் பாஸ் ஹவுஸ்க்குள் ஒரு டிஸ்கசன் போய்க் கொண்டிருக்கிறது.


இது தெரியாமல் நாம் தான் அவர் விரித்த வலைக்குள் சிக்கிவிட்டோம். இனி அர்ச்சனாவிடம் ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும் என்று தினேஷ் மற்றும் அங்குள்ள மொத்த கேங்கும் பேசுகிறார்கள். 

என்ன என்றாலும், இந்த போட்டியை பொறுத்த வரையில் புத்தியாக விளையாடுபவர்களுக்கே வெற்றி நிச்சயம்.இறுதிவரை பொறுத்து இருந்து பார்ப்போம். யார் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார்கள் என.. 

Advertisement

Advertisement