விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் தான் நடிகை சல்மா அருண். இவர் இந்த சீரியலில் ரோகினி என்ற கேரக்டரில் நடித்து வருகின்றார்.
சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர் சமீபத்தில் தான் 500 எபிசோடுகளை கடந்த வெற்றியை வெகுவாக கொண்டாடி இருந்தனர். இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய நாட்களுக்குள்ளையே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது.
அதிலும் இந்த சீரியலில் ரோகினி கேரக்டரில் நடிக்கும் சல்மா அருணுக்கு மிகப்பெரிய பேன்ஸ் பேஜ்ஜே உருவாகியுள்ளது. அதற்கு காரணம் அவர் இந்த சீரியலில் செய்யும் திருட்டு வேலைகளும் ஏமாற்று வேலைகளையும் தான். இதனால் ரோகிணியின் முகத்திரை எப்போது கிழியும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், நடிகை சல்மா அருண் சன் டிவி சீரியல் ஆன எதிர்நீச்சல் சீசன் 2ல் களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்ட வர்ஷினி வெங்கட்டும் இந்த சீரியலில் கமிட்டாகி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே விஜய் டிவியில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும் ரோகிணியும், பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்டு மேலும் பிரபலமான வர்ஷினியும் எதிர்நீச்சல் சீரியலில் களம் இறங்க உள்ளமை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இந்த சீரியலில் இவர்களுடைய கதாபாத்திரம் எப்படி அமையப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!