• May 11 2024

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் ராமராஜன்.. நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!


மீண்டும் ஹீரோவாக  களமிறங்கும் ராமராஜனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகி வைரலாகி வருகின்றது.


தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் 80களில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன்.இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே வெற்றி பெற்றுள்ளது. அத்தோடு அப்போதெல்லாம் ராமராஜன் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் ரசிகர்கள் அதிகம் குவிவதும் தெரிந்ததே.

மேலும் வெற்றி படங்களை கொடுத்து வந்த ராமராஜன் ஒரு கட்டத்தில் பெரிய அளவில் கதைகள் கவனம் செலுத்தாததால் ஒரு சில தோல்விப் படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் நடிப்பதை விட்டு விட்டு மண்ணுக்கேத்த பொண்ணு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

1989ஆம் ஆண்டு ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். இப்படம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கும் மேல் திரையரங்கில் ஓடி பல சாதனைகள் படைத்தது.



இவ்வாறு இருக்கையில் ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த அவர் வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். அவர் எப்போது மீண்டும் நடிக்க வருவார் என ரசிகர்களும் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது ராமராஜன் சாமானியன் என்ற படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்து இருக்கிறார். மேலும் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் ராமராஜன் உடன் ராதாரவி மற்றும் எம்எஸ் பாஸ்கர் ஆகியோரும் நடித்து இருக்கின்றனர். மொத்தம் 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.நடிகர் விஜய் சேதுபதி தான் சாமானியன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ 






Advertisement

Advertisement

Advertisement