சின்னத்திரையில் பிரபலமான இனியா, சிறகடிக்க ஆசை போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ப்ரீத்தா ஷெட்டி. அதிலும் சிறகடிக்க ஆசை சீரியல் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது.
இவருக்கு சிறு வயது முதலே சீரியலில் நடிப்பதற்கு ஆர்வம் இருந்துள்ளது.. ஆனாலும் ஆரம்பத்தில் மாடலிங் தான் செய்துள்ளார்.
கல்லூரியில் படிக்கும் போது பல ஆடிஷன்களில் பங்கேற்றுள்ளார். அதில் இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. எந்தப் பின்னணியும் இல்லாததால் எதையும் ரீச் பண்ண முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து சிறகடிக்க ஆசை சீரியலில் நடிப்பதற்கு கம்மிட்டானார். இந்த சீரியல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. இதன் காரணத்தினால் பிரீத்தா ஷெட்டியின் கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவருக்கு உதவி செய்யுமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ப்ரீத்தா ஷெட்டி.
தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருவதோடு பலரும் உதவும் மனப்பாங்கோடு அவருக்கு கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். இதோ குறித்த வீடியோ,
Listen News!