• Feb 22 2025

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தில் புதிய திருப்பம்..! இன்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, 18 ஆண்டு திருமண வாழ்வுக்குப் பின் பரஸ்பர விவாகரத்திற்காக கோரிய மனுவுக்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2004 ஆம் ஆண்டு காதலித்துப் பிறகு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகள், 2022-ஆம் ஆண்டு தங்களது திருமணத்தை முடிவுக்கு கொண்டுவர விருப்பம் தெரிவித்து அறிவித்தனர். இருவரும் இணைந்து மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, நீதிமன்றம் திருமண பதிவை ரத்து செய்யும் உத்தரவை பிறப்பித்துள்ளது.


விசாரணை முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, "திருமண பதிவு ரத்து செய்யப்படுகிறது" என அறிவிக்கப்பட்டது. இதனால், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அதிகாரப்பூர்வமாகப் பிரிந்துள்ளனர்.இந்த தீர்ப்பில், தம்பதிகள் தங்கள் இரண்டு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவின் நலனுக்காக இணைந்து முடிவுகளை எடுப்பதற்கு உறுதியளித்துள்ளனர்.


தனுஷ் தற்போது தனது திரைப்படங்களிலும் இயக்கத்திலும் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். இவர் இயக்கி நடிக்கும் "இட்லி கடை" திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஐஸ்வர்யா தனது புதிய திரைப்படத் திட்டங்களில் தீவிரமாக செயல்படுகின்றார்.


இந்த தீர்ப்பு ரசிகர்களிடையே கலவையான கருத்துக்களை உருவாக்கியுள்ளது. சிலர் "தீவிரமான முடிவுக்கு சென்ற இருவருக்கும் புதிய வாழ்க்கை அமைவதற்கு வாழ்த்துகள்" என்று தெரிவிக்க, மற்றவர்கள் இது மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகளை முற்றாக முடித்துவிட்டது என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement