• Dec 04 2024

தனுஷ் தொடர்ந்த வழக்கு...! சிக்கிய நயன்-சிவன்! ஐகோர்ட் போட்ட உத்தரவு..!

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

நான் ஹீரோயினாக நடித்து என் கணவர் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை தயாரிப்பாளர் தனுஷ் பயன்படுத்த கூடாது என்கிறார் என பிராது ஒன்றை வைத்தார் நடிகை நயன்தாரா. கடந்த வாரம் முழுக்க சமூக வலைத்தளத்தில் இந்த பஞ்சாயத்து பெரிய அளவில் போனது.


இந்நிலையில் நயன்தாரா ஆவண படத்தில் அனுமதி இன்றி நானும் ரவுடி தான் திரைப்படத்தின் வீடியோக்களை பயன்படுத்தியது தவறு என குறிப்பிட்டு நடிகர் தனுஷ் வழக்கு வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் தனது பெயருக்கும் புகழுக்கும் அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் நடிகை நயன்தாரா நடந்துகொண்டுள்ளார். இதனால் மானநஷ்ட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதற்கான உரிய இழப்பீடு தரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்துக்கு வரவுள்ளது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர தனுஷின் வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.  இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Advertisement

Advertisement