சென்னையில் மிகப்பெரிய வணிக நிறுவனமாக சரவணா ஸ்டோர்ஸ் காணப்படுகின்றது. அதன் உரிமையாளரான லெஜெண்ட் சரவணன் தற்போது விளம்பரங்களில் மட்டுமின்றி படங்களிலும் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக காக்கா கழுகு கதை பற்றி சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அவரும் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், எந்த ஒரு நாட்டில் வியாபாரம் செழிப்பாக இருக்கிறதோ அந்த நாட்டில் பொருளாதாரம் செழிப்பாக இருக்கும். ஏனெனில் அரசுக்கும் மக்களுக்கும் இடையில் வியாபார சுழற்சி பங்காற்றி வருகிறது
நம் நாட்டில் வியாபாரத்துறை செழிப்பாக இருந்தால் நம் நாட்டின் பொருளாதாரமும் வளமிக்கதாக மாறும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு வெற்றிகரமான வியாபாரத்திற்கு அதில் உள்ள உண்மைத்தனம், கடினமான உழைப்பு மிக முக்கியம்
இன்று மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அதில் காக்கா கழுகு கதைகள், இவருக்கு அந்த பட்டம், இவருக்கு இந்த பட்டம் என்ற பிரச்சனைகள் இருந்தால், அதனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது.
நாம் உழைத்தால் மட்டும் தான் உயர முடியும், நாம் உயர்ந்தால் நம்ம நாடும் உயரும். உழைப்போம், உயர்வோம், நாம் நாட்டையும் உயர்த்துவோம், அன்பால் இணைந்து செயல்படுவோம்' என்று கூறியுள்ளார்.
அதேவேளை, ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் காக்கா, கழுகு கதை கூறி ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து லியோ வெற்றி விழாவில் விஜயும் அதைப்பற்றி குட்டி ஸ்டோரி சொல்லி இருந்தார்.
இவ்வாறான நிலையில், இந்த இரண்டுக்கும் சேர்த்து வைத்து பஞ்ச் கொடுத்துள்ளார் லெஜெண்ட் சரவணன்.
Listen News!