• Jun 28 2024

கீர்த்தி ஷெட்டி கொடுத்த போஸில் தலைகீழான பேன்ஸ்..! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

2003 ஆம் ஆண்டு பிறந்த கீர்த்தி செட்டி, இன்று தமிழ் உள்ளிட்ட பலமொழிகளில் நாயகியாக கலக்கி வருகின்றார். இவருக்கு 21 வயது தான் ஆகின்றதாம்.

2019ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'சூப்பர் 30' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார்  கீர்த்தி செட்டி. அப்போது அவருக்கு 16 வயது.

இதை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு வெளியான தி வாரியார் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான கஸ்டடி என்ற படத்திலும் இவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.


இவ்வாறு தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி செட்டி, தற்போது தமிழில் வா வாத்தியார், இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ஜினி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், இன்றைய தினம் யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில், வித்தியாசமான முறையில் யோகா செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் குறித்த புகைப்படத்தை வைரலாக்கி  வருவதுடன், இந்த புகைப்படத்தை தலைக்குல தான் நின்னு பாக்கணும் என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement