• May 29 2023

விஜய்க்கு 200 கோடி சம்பளமா.. உண்மையை உடைத்து கூறிய முக்கிய பிரபலம்..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை முடித்த பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய இது உறுதியான தகவல் என்று தான் சொல்லப்படுகின்றது.

பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கப்போவதாக தெரியவந்துள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.

இவ்வாறுஇருக்கையில் , இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம் என்பது போல் சோசியல் மீடியாவில்  பேசப்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரபல பத்திரிகையாளர் உண்மையை உடைத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதன்படி, "தளபதி 68 படத்தில் விஜய்க்கு சம்பளம் ரூ. 125 கோடி மட்டும் தான். ரூ. 200 கோடி எல்லாம் ஒன்றும் இல்லை. அத்தோடு அது முற்றிலும் பொய்யான தகவல். ரூ. 125 கோடியுடன் சேர்த்து ரூ. 75 கோடி அதிகமாக விஜய்க்கு சம்பளம் தருவதற்கு தயாரிப்பாளர் ஒன்றும் முட்டாள் இல்லை" என்பது போல் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.








Advertisement

Advertisement

Advertisement