• Apr 25 2024

எதிர்நீச்சல் சீரியல் நடிகை விஜய்டிவி சீரியலில் அறிமுகம்..... ஏன் இந்த திடீர் முடிவு..?

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

 எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் தற்போது  வெளியாகி இருக்கிறது.

இதுவரைக்கும் எதிர்நீச்சல் சீரியலில் அதிகமான ரசிகர்களால் பாராட்ட பட்ட கேரக்டரில் இருந்து வந்த இவர் திடீரென்று இந்த முடிவெடுத்து விட்டாரே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்து விட்டது. இதனாலையே இந்த சீரியல் தற்போது 400 எபிசோடுகளுக்கு மேலாக சக்சஸ் ஆக சென்றுகொண்டு இருக்கின்றது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர்களின் மனங்கவர்ந்த கேரக்டர்களில் ஒருவராக நடிகை வைஷ்ணவி இருந்து வருகிறார் அவர் அந்த சீரியலில் வசு கேரக்டரில் நடித்து வருகிறார் ஜனனியின் நெருங்கிய தோழியாக இருந்து வரும் வசு ஜனனிக்கு பிரச்சனை வரும் நேரங்களில் எல்லாம் தோள் கொடுக்கும் ஒரு தோழியாகவும் குணசேகரனை தைரியமாக கேள்வி கேட்கும் ஒரு தைரியமான பெண்ணாகவும் இருந்து வருகின்றார்.


எதிர்நீச்சல் சீரியலில் ஜனனிக்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போது முதல் ஆளாக அங்கே வருவது வசுவாகத்தான் இருக்கும். அதனாலே ஜனனிக்கு இருக்கும் ரசிகர்கள் அதிகமாக வசுவிற்கும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். அத்தோடு இந்த நிலையில் தற்போது அவர் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் எனும் சீரியலில் நடிக்க இருக்கிறார் எனும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியலில் எப்பவாவது வந்து கொண்டிருக்கும் வைஷ்ணவி இனி கிழக்கு வாசல் சீரியலில் முழு கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று தற்போது கேள்விகள் எழுந்து வருகிறது. அத்தோடு வைஷ்ணவி அந்த சீரியலில் நடிக்கும் நடிகர் வெங்கட்ரங்கநாதன் அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவாக நடிக்கும் நடிகரோடு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.


இவ்வாறுஇருக்கையில் அப்போ வைஷ்ணவி தான் இந்த சீரியலில் வெங்கட்டிற்கு ஜோடியாக இருக்குமோ என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் பல பிரபலங்கள் இருக்கும் நிலையில் இந்த சீரியலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.






Advertisement

Advertisement

Advertisement