• May 17 2024

தளபதி 68 படத்தில் இந்த இளம் நடிகையும் நடிக்கின்றாரா?- அதுக்குள்ள இவ்வளவு பெரிய வாய்ப்பா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் தான் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றது.இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

 லியோ படம் வெளியாவதற்கு முன்னாள் தளபதி 68 குறித்த அறிவிப்பை வெளியிடக்கூடாது என்பதற்காக வெங்கட் பிரபு தளபதி 68 குறித்த கேள்விகளை தவிர்த்து வருகிறார்.இந்த நிலையில் இப்படத்தில் ஜோதிகா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


அதாவது தளபதி 68இல் பிரியங்கா மோகன் தான் இணையவுள்ளார் என்று கூறப்படுகின்றது.பிரியங்கா மோகனன் இந்த படத்தில் நடிக்கிறார் என தெரிந்ததும் ரசிகர்கள் அவரின் பெயரை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். எனினும், தளபதி 68இல் யார் கதாநாயகி என்பது குறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..

Advertisement

Advertisement