• May 10 2024

உனக்கு சோறு கிடைக்கிற இடம் தான் சொர்க்கமா?- ராஜுவை பங்கம் பண்ணின மன்சூர் அலிகான்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் ராஜு வீட்டில பார்ட்டி. இந்த நிகழ்ச்சியினை பிக்பாஸ்  சீசன் 5 இன் டைட்டில் வின்னரான ராஜு தொகுத்து வழங்கி வருகின்றார்.

ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக மன்சூர் அலிகான் கலந்து கொண்டார். இதில் பங்கு கொண்ட மன்சூர் அலிகான் ராஜுவை கலாய்த்து தள்ளினார்.


இந்த நிகழ்ச்சியில்  என்ட்ரி கொடுத்த உடனே ராஜூவை பார்த்து “நீ என்ன இங்க பண்ற, உனக்கு எவ்ளோ பெரிய டைட்டில் கிடைச்சு இருக்கு, அதை யூஸ் பண்ணி படம் பண்ணாம இங்க என்ன பண்ற” என ஆரம்பித்தார்.நிகழ்ச்சி முடியும் வரை இதையே சொல்லி கொண்டிருந்தார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று ராஜூவுக்கு தெரியவில்லை.

பிரியங்காவை கூட மன்சூர் அலிகான் பேச அனுமதித்தார். ஆனால் ராஜு நிலைமை தான் ரொம்ப பாவம்.ராஜூ என்ன சொல்ல வந்தாலும் ”பிக் பாஸ் டைட்டில் வாங்கிட்டு, அதுவும் கமல் சார் கையால வாங்கிட்டு இங்க என்ன பண்ற?” இதையே சொல்லி சொல்லி thug life வாங்கினார்.


”நல்ல உயரம், பெரிய கண்ணு, பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆனா சோறு கிடைக்கும் இடம் சொர்க்கம் அப்படின்னு இங்கே இருக்கிறியா? அமிதாப்பச்சன் மாறி இருக்க, போய் படம் பண்ணுப்பா” என ராஜூவை டைம் கிடைக்கும் போதெல்லாம் மன்சூர் அலிகான் ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.

ரசிகர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ராஜூ நிறைய படங்களில் கவனம் செலுத்துவார் என்று தான் நினைத்தனர். ஆனால் ராஜூ பிபி ஜோடிகள் ஆங்கர், ராஜூ வூட்ல பார்டி ஆங்கர் என இதில் கவனம் செலுத்துவதால் சிலர் ஏமாற்றமும் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement