• May 16 2026

ஒரே நேரத்தில் பல இடங்களில் ஐடி சோதனை.. அமீர் வீட்டிலும் அதிரடி வேட்டை.! பின்னணி என்ன?

shali / 1 month ago

Advertisement

Listen News!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஜாபர் சாதிக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை நகரில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த சோதனை நடவடிக்கைகள் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை செய்யும் நோக்கில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, பிரபல இயக்குநர் அமீர் அவர்களின் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை மற்றும் பறக்கும் படையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜாபர் சாதிக் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த சோதனைகள் நடைபெறுகின்றன என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் விசாரணையின் அடிப்படையில் மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement