• Jun 13 2026

அஜித்தின் அசுர பலத்தை சோதிக்கும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ்.. முடங்கிய படப்பிடிப்பு.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், தனது அடுத்தடுத்த திரைப்படங்களுக்கான சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

இதுவரை ஒரு படத்திற்கு சுமார் ரூ.163 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்பட்ட நிலையில், தற்போதைய சந்தை சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதை ரூ.150 கோடியாக குறைக்க அவர் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் தயாரிப்பு நிறுவனங்களின் நிலைப்பாடு வேறுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக தியேட்டர் வசூல், OTT உரிமைகள் மற்றும் வெளிநாட்டு வணிகம் உள்ளிட்ட வருவாய் வாய்ப்புகள் மாறிவிட்டதால், முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய சம்பளம் வழங்குவதில் தயாரிப்பாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அஜித்துக்கு ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை மட்டுமே வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டில் சில நிறுவனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக Hombale Films நிறுவனம் ரூ.90 கோடிக்கு மேல் வழங்க முடியாது என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், திரைப்பட தயாரிப்பில் ஆர்வம் காட்டி வரும் ஒரு பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ரூ.110 கோடி வரை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பள பேச்சுவார்த்தையில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படாததால், அஜித்தின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தாமதமாகி வருவதாகவும், விரைவில் தெளிவான முடிவு வெளியாகலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த புதிய திட்டம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது தற்போது பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement