• Jun 14 2026

தனுஷுடன் மீண்டும் ஜோடி சேரும் சாய் பல்லவிக்கு வந்த பெரிய சிக்கல்... முழுவிபரம் இதோ.!

shali / 2 days ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'மாரி 2' திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். 

அந்தப் படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி..' பாடல் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, யூடியூப்பில் 160 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று தென்னிந்திய சினிமாவின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக இடம்பிடித்தது.


இந்த நிலையில், தனுஷின் 55வது திரைப்படமாக உருவாகி வரும் 'D55' படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணியை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தை 'அமரன்' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. உளவாளி பின்னணியில் உருவாகும் அதிரடி திரில்லர் கதைக்களத்தை மையமாகக் கொண்டு படம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் சாய் பல்லவி காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது நடிப்பு திறமையை நிரூபித்துள்ள சாய் பல்லவி, போலீஸ் அதிகாரி வேடத்தில் எப்படி கவரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement