• Jun 13 2026

ரசிகர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுகிறாரா மீனாட்சி சவுத்ரி? இணையத்தில் கசிந்த ஆதாரம்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

மீனாட்சி சவுத்ரி தெலுங்கு திரைப்பட உலகில் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா அளவில் அதிக கவனம் பெற்றுவருகிறார். தற்போது இரண்டு இந்தி திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி இருப்பதால், அவரது நடிப்பு வாழ்க்கை வேகமாக விரிவடைந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், அவரது பெயரை பயன்படுத்தி போலியான தொலைபேசி எண் உருவாக்கப்பட்டு மோசடி நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, மீனாட்சி சவுத்ரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், தனது பெயரில் இருந்து வரும் போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், செயலியில் தோன்றிய சந்தேகமான திரைப்பிடிப்பு படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் காட்டப்பட்ட எண்ணிலிருந்து யாருக்காவது அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

“அது நான் அல்ல” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ள அவர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு, இப்படியான மோசடிகளை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement