• Jun 12 2026

10க்கு 10 கொடுக்கலாம்... ஆனால் 'ஹபீபி' படம் ஏன் இவ்வளவு பேசப்படுகிறது? பப்ளிக் விமர்சனம்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

மீரா கதிரவன் இயக்கத்தில், மாளவிகா மனோஜ், ஈஷா, கஸ்தூரி ராஜா என பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ஹபீபி. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள ஹபீபி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையானாலும் கவனம் ஈர்க்கும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கையை எந்தவித பிரிவினை சாயமும் இல்லாமல் இயல்பாக பதிவு செய்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறை, வெளிநாட்டு வேலைக்காக குடும்பத்தை விட்டு செல்லும் ஆண்களின் வலி, பின்னால் தனிமையில் வாழும் பெண்களின் போராட்டம் ஆகியவற்றை படம் இயல்பாக பதிவு செய்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர், "முஸ்லிம் வாழ்க்கைன்னா நாம வெளியில இருந்து பார்க்குறது வேற... அவங்க குடும்பத்துக்குள்ள இருக்குற கஷ்டம் வேற. அதை இந்த படம் கண்முன்னாடி கொண்டு வந்துருக்கு" என பேசியுள்ளனர்.

மேலும் ரசிகர் ஒருவர் பேசுகையில், "ஹபீபி கம் டு துபாய் மாதிரி இருந்துச்சு... 10க்கு 10 கொடுக்கலாம். இது ஒரு மதத்தைப் பற்றிய படம் இல்ல, ஒரு வாழ்க்கையைப் பற்றிய படம்" என்று தெரிவித்தார்.

மற்றொருவர், "இந்த படம் முஸ்லிம்களுக்கு மட்டும் இல்ல. எல்லாரும் குடும்பத்தோட வந்து பார்க்கலாம். நாம தெரியாம இருந்த நிறைய விஷயங்களை இந்த படம் சொல்லுது" என்றார்.

இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்பும் பாராட்டுகளை பெற்று வருகிறது. குறிப்பாக கதாநாயகர், அவரின் தந்தை கதாபாத்திரம் மற்றும் முக்கிய பெண் கதாபாத்திரங்கள் உணர்வுபூர்வமாக நடித்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

அதேநேரத்தில், சிலர் படத்தில் நகைச்சுவை காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் வணிக ரீதியாக கூடுதல் வரவேற்பு கிடைத்திருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில், சமூக வாழ்க்கை, குடும்ப பாசம், வெளிநாட்டு வாழ்க்கையின் மறுபக்கம் மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக ரசிகர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

Advertisement

Advertisement