• Jun 14 2026

சோகத்திற்கு நடுவே அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா மனைவி.. நடந்தது என்ன.?

shali / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்த பாரதிராஜாவின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவையடுத்து அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்தினர்.


இந்த நிலையில், பாரதிராஜாவின் மனைவி சந்திர லீலா தனது குடும்பத்தின் சார்பில் உருக்கமான நன்றியறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தனது கணவரின் மறைவால் துயரத்தில் இருந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும், பாரதிராஜாவின் இறுதிச்சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்த உத்தரவிட்ட தமிழக முதல்வர் விஜய்க்கு அவர் சிறப்பு நன்றியை தெரிவித்தார். அதோடு, இறுதிச் சடங்கு ஏற்பாடுகளில் முழு ஒத்துழைப்பையும் வழங்கிய அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் நன்றியை பதிவு செய்துள்ளார்.

பாரதிராஜாவை இறுதி அஞ்சலிக்காக நேரில் வந்து மரியாதை செலுத்திய திரையுலக பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் அன்பும் ஆதரவும் குடும்பத்திற்கு மிகுந்த ஆறுதலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்திர லீலா பாரதிராஜாவின் இந்த நெகிழ்ச்சியான நன்றியறிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அந்த பதிவை பகிர்ந்து, பாரதிராஜாவின் கலைப்பணிகளையும் அவர் தமிழ் சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement